Advertisment

மாற்றத்தை பற்றி பேசும் தலைவர்களே, இளைஞர்களே,அரசியல் ஆய்வாளர்களே...சீமான் பேட்டி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

Advertisment

இலங்கை தமிழர் படுகொலையில் பாரதிய ஜனதா காங்கிரஸ் மீது தற்போதுகுற்றம்சாட்டுவதுதார்மீக நேர்மை அல்ல, எப்படி என்றால் போரை நடத்தியது காங்கிரஸ் ஆட்சி அதற்கு கூட நின்றது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்.ஆனால் அன்றைய வலிமையான எதிர்க்கட்சி பாஜக, ஒரு 2ஜி அலைக்கற்றை ஊழலுக்காக ஒரு மாசம் முப்பது நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கிபோட்டபாரதிய ஜனதா கட்சி இலங்கை என்கிறபக்கத்து நாடு மக்களை கொன்றுகுவித்தபோதுஎங்களைப் போன்று இனசாவு என்று நீங்கள் கதற வேண்டாம் ஒரு மனிதப்படுகொலை என்கின்ற முறையில் ஏதாவது அதை தடுக்க ஒரு வார்த்தை, ஒருஉறுப்பினர் பதிவு செய்ததை நீங்கள் பார்த்ததுண்டா. அன்றுவேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அதன் பிறகு ஐநாவில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முன் மொழியும் போது நாம் எப்பொழுதும் சிங்களர் பக்கம் தான் நிற்க வேண்டும் அத்வானி பேசியபதிவுகள் எல்லாம் இன்றும் உள்ளது.

Advertisment

seeman

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சிங்களர்கள்ராமனின்வாரிசுகள் வம்சாவளியினர் தமிழர்கள்இராவணனின்வம்சாவளியினர் எனவே சிங்களர் பக்கம்தான் நிற்க வேண்டும் என்று பேசிய பதிவுகள் எல்லாம் இருக்கிறது. காங்கிரஸ் கொன்றுவிட்டுவேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அன்று பாஜக செய்தது என்ன?

கூட்டணி பற்றிய கேள்விக்கு..

நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள் என்றால் கூட்டணி வைத்தாலும் திட்டுவதுகூட்டணி வைக்காமல் தனியாக நின்றாலும் திட்டுவது இது ஒரு கொள்கையாகவைத்திருக்கிறார்கள்.

மாற்று என்பது எப்படி, நானாவது இன்னொரு தலைமுறை பிள்ளைகளுக்கு நம்பிக்கையாக நின்று விட்டு போகிறேனே. நீங்க ஏன் என் தற்காலிக வெற்றியைப் பற்றிக் கவலைப்பட சொல்கிறீர்கள். கூட்டணி வைத்து வென்றவர்கள்சாதித்தது என்ன?

எல்லாருமே வருவது மாற்றம் மாற்றம் என்று சொல்வதுபிறகுஅவர்களுடனேசேர்ந்து பெரிய ஏமாற்றத்தை கொடுப்பது. மாற்றம் என்று பேசுகிற தலைவர்கள், மாற்றத்தை பற்றிசிந்திக்கும்இளைஞர்கள், அரசியல் ஆய்வாளர்களிடம் நான் கேட்பது எதில்இருந்து மாற்று, எப்படிப்பட்ட மாற்று எந்த கட்சியின் ஆட்சியில் இருந்து மாற்றத்தை கேட்கிறீர்கள்.

மாற்றம் என்று பேசிவிட்டு பின்னர் அவர்கள் கூடவேதுணை நின்றுஅவர்களே ஆட்சி அமைக்கக் செய்வது என்பதுஎப்படிமாற்றமாக இருக்கும்.அது பெரிய ஏமாற்றமாகதானே இருக்கும்.அதை செய்ய நாங்கள் தயாராக இல்லை. அதனால் நாங்கள் தனித்துதான்போட்டியிடுகிறோம். எங்களுக்கு தனித்ததத்துவம் இருக்கிறது.நாங்கள் தனித்து பாதையை கொண்டிருக்கிறோம் எனவே தனியாகதொடர்ச்சியாக பயணிப்போம் என்றார்.

nam tamilar SEEMANISAM Seeman talk seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe