s

Advertisment

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்கரங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் நிவாரணப்பொருட்களை அனுப்பியும், நிதி உதவி அளித்தும் வருகின்றனர். இந்நிலையில் நிவாரணப்பொருட்களை சேகரித்துக்கொண்டு நேரடியாக கேரளா சென்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை இருங்கிணைப்பாளர் சீமான்.

தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மலையாளச் சகோதரர்களுக்கு மானுடத்தோடு மலையாள மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யும் நோக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு இன்று 25-08-2018 மாலை 05 மணியளவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்கு விரைகின்றனர்.