Advertisment

சீமான் சர்ச்சை பேச்சு... அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

கடந்த (13.10.2019) அன்று விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விக்கிரவாண்டிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ee

அதோடு மட்டுமல்லாமல் மாவட்ட தேர்தல்அதிகாரியிடம் இருந்து விரிவான அறிக்கையைதமிழகதலைமை அதிகாரி சத்யா பிரதா சாஹு கேட்டிருக்கிறார். சீமான் என்ன பேசினார், எங்கு பேசினார்,வீடியோ ஆதாரம் போன்றவை தொடர்பான விரிவான அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் நேற்றுபுகார் மனு ஒன்றும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கபட்டுள்ளது. அந்த புகார் மனு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெறப்படும் அறிக்கையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

congress election commission ntk seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe