Advertisment

ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து!

gh

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில்திமுக வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வரும் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு தேசியக் கட்சித் தலைவர்கள், மாநிலக் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, "தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுகவுக்கும், அதன் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுதமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

mk stalin seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe