seeman

வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Advertisment

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேராளவுக்கு நிவாரண பொருட்கள் வழங்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தமிழகத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு சென்றனர்.

Advertisment

seeman

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர்கள் அங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். பின்னர் அவர்கள் தமிழகம் திரும்பும் வழியில் நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த பிரபாகரன் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இருந்ததால், அவர்கள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

seeman

இதனால், கோட்டயம் கிழக்கு காவல்நிலைய காவலர்களால் சீமான் உட்பட 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்ற 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டன. சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய பின்னர் வாகனங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Advertisment