seeman

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஆதரவாக தேர்தல் பரப்புரை கூட்டம் பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் மீது எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு) வரும் நவம்பர் 6-ந் தேதி அன்று சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தநிலையில் இன்று சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.