நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டுஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் விடுதலைப் புலிகளைஆதரித்துப்பேசியதாக மூன்று பேர் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கில் மூவரும் தற்போது ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.