Seeman and Anbumani congratulate to tvk vijay

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமானவிஜய்யின் 51 வது பிறந்தநாள் இன்று அவருடைய கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் அவருடைய பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்வெளியிட்டள்ள பதிவில்,' தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம்தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!' என தெரிவித்துள்ளார்.

Advertisment

vijay

பாமகவின் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தம்பி விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.