Advertisment

‘எழுச்சியின் வடிவம் எம் தலைவர்’-சீமான் வெளியிட்ட பாடல்

s

Advertisment

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நேற்று 26-11-2018 திங்கட்கிழமை, மாலை 05 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள பாலர் கல்வி நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

s

'அறம்' குழுவினரின் பறையிசையோடு தொடங்கிய இந்நிகழ்வில் "எழுச்சியின் வடிவம் எம் தலைவர் " என்ற தலைப்பில் தேசியத்தலைவர் பற்றிய எழுச்சிப் பாடல்களை சீமான் வெளியிட்டார்.

Advertisment

s

இதில் மாநில ஒருங்கிணைபாளர்கள் கலைக்கோட்டுதயம், அன்புத்தென்னரசன், வழக்கறிஞர் இராவணன், விருகை இராஜேந்திரன், களஞ்சியம் சிவக்குமார், ஆன்றோர் பாசறை புலவர் மறத்தமிழ்வேந்தன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, இயக்குநர் ஜெகதீசப் பாண்டியன், மகேந்திரன், மராட்டிய மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, மாநிலச் செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைபாளர்கள் இடும்பாவனம் கார்த்திக், சாரதிராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மேலும் மத்திய சென்னை மண்டலச் செயலாளர் அன்வர்பேக், மத்திய சென்னை நடுவண் மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாவட்டப் பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், இம்தியாஸ், இராஜாராம், அர்ஜூன், எழும்பூர் தொகுதிச் செயலாளர் ஐயனார், துறைமுகம் தொகுதிச் செயலாளர் தம்பி முருகேசன் ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.

seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe