/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/seeman1_9.jpg)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கார் டிரைவர் அன்புச்செழியன். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் எருக்கூர் அடுத்த தில்லைபட்டினம் கிராமத்தைச்சேர்ந்தவர். உடல்நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு சென்று மருத்துவ சிகிச்சை எடுத்த நிலையில், சிகிச்சை பலனின்றி அன்புச்செழியன் உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/seeman_54.jpg)
இதையடுத்து, தில்லைப்பட்டினம் சென்று அன்புச்செழியன் உடலைப்பார்த்து , தலையில் அடித்துக்கொண்டு கதறு அழுதார் சீமான். உடன் இருந்த கட்சியினர் அவரை தேற்றினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anbu1.jpg)
சீமானுக்கு டிரைவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கு பாதுகாவலனாகவும், உதவியாளராகவும், தம்பி போல் அன்புச்செழியன் இருந்ததாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/seeman3_1.jpg)
அன்புச்செழியனின் இறுதிச்சடங்கிலும் பங்கேற்று, இடுகாடு வரை அவரது உடலை சுமந்து சென்றார் சீமான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)