Advertisment

’கொடுங்கோலர்களை உடனடியாக கடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்’-சீமான் வலியுறுத்தல்

s

Advertisment

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்து மாணவர்கள் மீது முகமூடி கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியதால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில்,

’’டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூகவிரோதிகள் மாணவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்.

விடுதி கட்டண உயர்வு தொடங்கி குடியுரிமைச் சட்டத்திருத்தம் வரை அநீதிக்கெதிராக களத்தில் சமரசமற்று நிற்கும் மாணவப்பிள்ளைகளுக்கு ஆளும் வர்க்கத்தால் நேரடியாக விடப்பட்டிருக்கிற கொலைமிரட்டல்; அச்சுறுத்தல். தாக்குதலில் ஈடுபட்ட கொடுங்கோலர்களை உடனடியாக கடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்’’என்று வலியுறுத்தியுள்ளார்.

seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe