வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

Advertisment

s

அவர் பேச ஆரம்பித்த போதே மிதமான மழை பெய்தது. இருந்தாலும் மழையில் நனைந்தவாரே சீமான் பேசினார். சீமான் பேசிமுடிக்கும் வரையில் மழை பெய்துகொண்டே இருந்தது. மழையில் நனைந்தபடியே கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் சீமான் பேச்சை கடைசி வரை கேட்டனர்.

Advertisment

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சென்னை ஆவடியில் நடந்த பிரச்சாரக்கூட்டத்திலும் கொட்டும் மழையில் கடைசி வரை சீமான் பேசினார். பொதுமக்களும் கடைசிவரை மழையில் நனைந்தபடியே அவரது பேச்சை கேட்டனர்.