Skip to main content

கிராமசபைக் கூட்டங்களின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்! - சீமான் அறிவுறுத்தல்

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’’தமிழகத்தில் கடந்த மே-01 அன்று மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளின்படி நிறுத்திவைக்கப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை உடனே நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கடந்த 18ஆம் தேதியன்று தமிழகமெங்குமுள்ள நாம் தமிழர் கட்சியின் மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

 

n

 

தற்போது வருகிற 28ஆம் தேதியன்று தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்கள் அனைத்துக் கிராமங்களிலும் நடைபெறும் எனத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் தமிழர் உறவுகள் தத்தம் கிராமங்களில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அவசியம் பங்கேற்று கிராமப்புற மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்யவும், அவர்களது வாழ்வாதாரங்களை உறுதிசெய்யவும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

 

n

 

மேலும், மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் மீது திணிக்கப்பட்டு வரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவு மையம், கெயில் குழாய் பதிப்பு, உயர் மின்னழுத்தக் கோபுரம், எட்டுவழிச் சாலை, தாமிர ஆலை போன்ற நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகக் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற முன்மொழிந்து, அவற்றின் வாயிலாக அரசுக்கு அழுத்தமும், மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் எனவும், கிராமப்புற உட்கட்டமைப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குடிநீர், சாலை, மருத்துவ வசதி, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இதனை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நாம் தமிழர் உறவுகளை அறிவுறுத்துகிறேன்.’’

 

n

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய சின்னத்துடன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நாம் தமிழர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Naam Tamilar Party to introduce candidates and new  Symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். வழக்கம்போல இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

''நாம் தமிழர் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறது தெரிகிறது'-எல்.முருகன் பேட்டி

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
"It seems naam tamilar are working against the " - L. Murugan interview

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி இருந்தது. இதில் சில புத்தகங்கள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக இணை அமைச்சர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ''இது ஒரு மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம்.  தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை இது காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழக காவல்துறை கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. என்.ஐ.ஏ அவர்களைத் தொடர்ந்து செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்த பிறகு அவர்கள் நாட்டிற்கு எதிராக செயல்கள் செய்தது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை செய்திருக்கிறார்கள். அவர்களை கைது செய்ய இருக்கிறார்கள். என்.ஐ.ஏ தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள். நாட்டுக்கு எதிராக யார் யார் செயல்படுகிறார்களோ அவர்களை கண்காணிக்கின்ற அமைப்பு. அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது'' என்றார்.