நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில், நடிகர் நாசர் தலைமயிலான பாண்டவர் அணியும், நடிகர் கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. இருதரப்பினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

s

Advertisment

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்த கேள்வியை எழுப்பி, யாருக்கு ஆதரவு என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ’’இது நடிகர் சங்க தேர்தல் தானே. நாடாளுமன்ற தேர்தல் இல்லையே. இவ்வளவு பரபரப்பாக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலங்களில் அவர்களுக்கு(விஷால் அணி) வாய்ப்பு கொடுத்தார்கள்.

Advertisment

முறையாக இயங்கவில்லை என்பதால்தான் இவ்வளவு எதிர்ப்புகள் வருகிறது. என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில் ஐயா பாக்யராஜை நான் அறிவேன். அவர் எந்த வேலையைச்செய்தாலும் அதில் நேர்மையாக இருப்பார். எழுத்தாளர் சங்கத்திற்கு தலைவராக இருக்கும்போது சர்க்கார் பிரச்சனையில் அவருக்கு எவ்வளவோ நெருக்கடிகளை கொடுத்தபோதும் நேர்மையின் பக்கம் நின்றார். அதனால் அவர் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன். அவர் வெல்லுவதற்கு நான் வாழ்த்துகிறேன்.’’என்று பதிலளித்தார்.