Advertisment

“அவரை பார்ப்பது எங்களுக்கு வரப்பிரசாதம் மாதிரி” - காத்திருக்கும் நிர்வாகிகள்

publive-image

நடிகர் விஜய் 5 மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் சந்தித்து இருந்தார். இந்நிலையில் மீண்டும் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

இன்று காலை அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மூன்று மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீடு அமைந்திருக்கும் பகுதியில் விஜய் மக்கள் இயக்கநிர்வாகிகள் அதிகம் பேர் கூடியுள்ளனர். சிலர் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல நிர்வாகிகள் வெளியே காத்திருக்கின்றனர். உள்ளே மொபைல் எடுத்துச் செல்லக்கூடாது, பேனா எடுத்துச் செல்லக்கூடாது எனத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வெளியே காத்திருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''அவரை பார்ப்பதற்கு எங்களுக்கு முன்பே அழைப்பு வந்தது. எங்கள் தெய்வத்தைப் பார்ப்பதற்கு இன்று ஒன்பது மணிக்கு டைம் கொடுத்தார்கள். வந்துவிட்டோம். மூன்று, நான்கு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கிறோம். கடவுளைப் பார்க்கிற மாதிரி அவர் எங்கள் தெய்வம். அவர்தான் எங்களுக்கு எல்லாமே. அவரை விட்டால் எங்களுக்கு வேறு எதுவுமே கிடையாது. அவரை பார்ப்பது எங்களுக்கு பெரிய வரப்பிரசாதம் மாதிரி'' என்றார்.

meetings
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe