Advertisment

'ஆன்லைனில் செக்யூரிட்டி... ஆப்லைனில் திருடன்...'- சிக்க வைத்த சிசிடிவி

 'Security Online...Thief Offline...'- Caught CCTV Footage

Advertisment

தாம்பரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போதே உள்ளே புகுந்த மர்ம நபர் பணம் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவமும் அதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவர் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டின் பின்பக்க கதவின் தாழ்பாளை உடைத்து மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்த நகை, செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றதாக புகார் அளித்திருந்தார்.

மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ராயப்பேட்டையைசேர்ந்த ஜானகிராமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வாட்ச்மேனாக வேலை செய்து வந்த ஜானகிராமன் வேலை செய்து கொண்டே திருட்டில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

police tambaram
இதையும் படியுங்கள்
Subscribe