Advertisment

திருமணம் செய்வதாக கூறி 12 வயது சிறுமியை கடத்திய காவலாளி!

security kidnapped 12-year-old girl saying she was going to get married

சென்னைமுகப்பேர்பகுதியில் வசித்து வந்த 12 வயதுசிறுமியைகாவலாளி ஒருவர் கடத்தி சென்றதாக அவரது தயார் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். வளசரவாக்கத்தைச் சேர்ந்த பம்பி என்ற 24 வயதான ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் பம்பி,முகபேர்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திசென்றதாகசிறுமியின் தயார் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தபோலீசார், இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்தனர். அதில் பம்பி 12 வயது சிறுமியுடன் திருப்பதியில் இருப்பதைத் தெரிந்துகொண்டபோலீசார், திருப்பதி விரைந்து சென்றனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்டபோலீசார்,பம்பியைபோக்சோசட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பம்பியை சிறையில் அடைத்தனர்.

police Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe