Skip to main content

நேரு உள்விளையாட்டரங்கில் காவலர் தற்கொலை!

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

Security guard  in Nehru indoor stadium!

 

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சி மீண்டும் பிரமாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விளையாட்டரங்கில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிய உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியானது தற்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் நிறைவு விழா மீண்டும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா மேடைக்கு வருகின்ற வழியில் சென்னை ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் என்பவர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

இந்நிலையில் கழிவறைக்குச் சென்ற செந்தில்குமார் வெளியே வரவில்லை. திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்த மற்ற காவலர்கள் ஓடிச் சென்று கதவை உடைத்துப் பார்த்தனர். அப்பொழுது செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ஆயுதப்படை காவலர் செந்தில் குமார் தன் கையில் வைத்திருந்த எஸ்எல்ஆர் ரக துப்பாக்கியை கொண்டு நெஞ்சில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.  உடனடியாக அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த சில தினங்களாக மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் செந்தில்குமார் மன உளைச்சலிலிருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக மேலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதேபோல் கடந்த 26 ஆம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் இருக்கும் செந்தில்குமார் விடுப்பு கிடைக்காத சூழலில் இருந்ததால். அது அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.