வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நோயளிக்கு காவலர் சிகிச்சை அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த மருத்துவமனைக்கு மருத்துவர்கள் முறையாக பணிக்கு வராத காரணத்தினால் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவருக்கு மருத்துவமனை காவலாளி சிகிச்சை அளிக்கும் காட்சி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த சம்பவத்தை அருகில் சிகிச்சை பெற்று வந்த சக நோயாளிகளின் உறவினர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலே இந்தநிலை ஏற்பட்டுள்ளதை கண்டு அந்த மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக நோயாளிகள் கூறும்போது,
இங்கு 60க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் இருந்தும், நோயாளிகள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.