ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியது, ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பல்வேறு நாடுகளும் ஆப்கானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிப்போம். இங்கிருக்கும் வெளிநாட்டினர் அச்சப்பட தேவையில்லை என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.