Advertisment

மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா?- உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Secular tape? Religiously divided tape? - High Court question!

இந்தியா மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற விளம்பர பலகைகளை கோவில்களின் நுழைவு வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

Advertisment

இந்த பொதுநல வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு முன்பு இன்று (10/02/2022) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "பல கோவில்களில் உரிய நடைமுறைகளும், மரபுகளும் பின்பற்றப்படுகின்றன. நாட்டில் சிலர் ஹிஜாப்புக்காகவும், வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? நாடு முக்கியமா? மதம் முக்கியமா?" அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோயிலில் ஆண் பக்தர்கள் மேலாடை அணியக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்து அல்லாதோர் கொடி மரத்தைத் தாண்டி கோயில்களுக்குள் நுழையத் தடை விதிக்கும் மரபு இன்னும் பல கோவில்களில் அமலில் உள்ளது" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும், இது மத ரீதியாக நாட்டை பிளவுப்படுத்துவது போன்ற என்றும் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆடைக் கட்டுப்பாடு விதிகள் குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

temples
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe