ரகசியமாக அதிமுக வேட்பாளர் முன்னிலையில் தபால் வாக்கு போட்ட போலிஸார்

மதுரை பாராளுமன்ற தேர்தலில் போலிஸாருக்கான தபால் ஓட்டு பதிவு புதன் அன்று காலை காவல்துரை ஏ.ஆர் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. அது திடீரென மதுரை மீனாட்சி கல்லூரிக்கு மாற்றபட்டு, காலை 9 மணிக்கு தொடங்கியது..

மதுரை நகர் போலிஸார் 1912ம் புறநகர் போலிஸாரும் சேர்த்து 2815 பேர் வாக்களிக்க இருந்தனர்.

election

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சிறிது நேரத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் வாக்கு நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை உள்ளே அழைத்து வந்த காவல்துறைஅதிகாரிகளிடம்வெகுநேரம் பேசிகொண்டிருந்தார். பின்பு அங்கு ஓட்டு போட நின்று கொண்டிருந்தவர்களிடம் வாக்கு கேட்டார். அதை படம் பிடிக்க நாம் முயன்றபோது நம்மை போலிஸார் அனுமதிக்கவில்லை. ஆனால் அவரை மட்டும் உள்ளே அழைத்து சென்றதை பற்றி போலிஸாரிடம் கேட்டதற்கு இதுக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது என்க..

election

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நாம் ராஜ்சத்தியனிடம் விதியை மீறி ஓட்டு கேட்கலாமா? என்க அதற்கு சிரித்து கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதை ஆட்சியர் நடராசனிடம் கேட்டோம் அதற்கு அவர் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டு பதிவு மையத்தை பார்வையிடலாம் ஆனால் ஓட்டுதான் சேகரிக்க கூடாது எனக்கூறினார்.அதிமுகவேட்பாளர் ''ஓட்டு கேட்டாராஅப்படி எதுவும் புகார் தெரிவிக்கவில்லையே யாரும்'' என்று வேகமாக இடத்தை காலி செய்தார் கலெக்டர் நடராசன்.

நாம் இதுகுறித்து கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனிடம் தொடர்புகொண்டு கெட்டபோது,இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் சட்டபடி நடவடிக்கை எடுக்க வழியுறுத்துவோம். மேலும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான படிவமே கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள் என்று ஜக்டோ ஜியோ மற்றும் அரசு பணியாளர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டளிப்பார்கள் என்ற யூகத்தால் அவர்களை இழுத்தடிப்பது பற்றியும் சட்டபடி கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். சிலைக்கு மாலை போட்டதற்கே என் மேல் வழக்கு போட்டவர்கள் தேர்தல் விதி மீறி ராஜ்சத்யன் போலிஸாரிடம் ஓட்டு கேட்டதும், அவரை போலிஸாரே உள்ளே அழைத்து சென்று கேன்வாஸ் செய்ததும் என்ன நியாயம் இதை சும்மா விடமாட்டோம் என்றார்.

Election madurai police
இதையும் படியுங்கள்
Subscribe