
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் ஒன்றில் கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்தியதாக தற்காலிக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நான்காண்டுகளுக்கு மேலாக சத்துணவு பிரிவில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை செய்து வருபவர் சாவல்பட்டியைச் சேர்ந்த சுதாகர். கடந்த 20 நாட்களுக்கு முன்புசுதாகரின் செல்போனை அவரது உறவினர் ஒருவர் எடுத்து பார்த்தபோது ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஆபாச காணொளிகள் இருந்தது.
இதனைக் கண்டு அதிர்ந்த சுதாகரின் உறவினர் சுதாகர் வேலை செய்யும் மாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ-விடம் செல்போனை ஒப்படைத்துள்ளார். அதனையடுத்து அலுவலகத்தில் உள்ள கழிப்பறையின் மின் விளக்கில் பொருத்தப்பட்ட ரகசிய கேமராவையும், அவர் பயன்படுத்தி வந்தஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டதோடு சுதாகர் பணி நீக்கமும் செய்யப்பட்டார்.
Follow Us