Advertisment

அண்மையில் நிகழ்ந்த இரண்டாவது தற்கொலை; குழு அமைத்த ஐஐடி 

 A second recent incident; IIT set up by the committee

Advertisment

சென்னை ஐஐடியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவர் புஷ்பக் ஸ்ரீ சாய் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் சென்னை ஐஐடியில் எம்.எஸ். எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீவன், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில்தற்போது அடுத்த மாதமே மீண்டும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது அண்மையில் நிகழ்ந்த இரண்டாவது தற்கொலை என்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் பிரதிநிதி, ஆசிரியர்கள் பிரதிநிதி ஆகியோர் தலைமையில் ஒரு குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின்தலைமையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறும் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் 'உயிரிழந்த இரண்டு மாணவர்களின் குடும்பங்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். மாணவர்கள் அனைவரும் அனுதாபத்தையும் இரங்கல்களையும் தெரிவிக்குமாறு' தெரிவித்துள்ளது.

Investigation iit
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe