Second phase of river water talks between Tamil Nadu and Kerala today!

தமிழகம்- கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று (11/09/2020) திருவனந்தபுரத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. கேரள குழுவுடன் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

Advertisment

இந்த பேச்சுவார்த்தையில் நிலுவையில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்ட ஒப்பந்தம் மறுஆய்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும் பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்தி பவானி அணைக்கு தண்ணீர் திருப்புவது பற்றியும், கோவை மாநகர குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய சிறுவாணி அணை பிரச்சனை குறித்தும் பேச வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

நதிநீர் பங்கீடு குறித்து இரு மாநிலங்களும் சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.