
தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று அக்.06 ஆம் தேதி நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 74.37% வாக்குகள் பதிவாகியதாகத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் அக்.09 ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் நிலையில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தற்பொழுது நிறைவுபெற்றுள்ளது.
தேர்தல் பரப்புரை முடிந்ததால் ஊராட்சிக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாளை மறுநாள், 35 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,314 கிராம ஊராட்சி மன்றத் தலைவர், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 34,65,724 பேர் வாக்களிக்க உள்ளனர்.