இரண்டாம் கட்ட கல்வி விழா- அதிகாலையிலேயே புறப்பட்ட விஜய்

Second phase of education ceremony- Vijay started to leave early in the morning

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாம் கட்டமாக நடைபெறும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும்பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவிற்காக தற்பொழுது திருவான்மியூரில் உள்ள மண்டபத்திற்கு சென்றுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் மண்டபம் ஒன்றில் இதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது நடிகர் விஜய் திருவான்மியூரில் உள்ள மண்டபத்திற்கு அதிகாலையிலேயே சென்றுள்ளார். மற்ற நேரங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிகாலையிலேயே அவர் மண்டபத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. 725 மாணவ -மாணவிகள் உட்பட 3,500 பேர் இன்றைய பாராட்டு நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இரண்டாம் கட்ட நிகழ்வில் பேச மாட்டேன் என விஜய் அன்று கூறியிருந்த நிலையில் திடீர் டிவிஸ்ட்டாகஇன்று மாணவர்கள் மத்தியில் விஜய் பேசப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe