/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raid434343434.jpg)
எம்ஜிஎம்குழும நிறுவனங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர், இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கேளிக்கை பூங்கா, மதுபான உற்பத்தி, மருத்துவம் உள்ளிட்ட தொழில்துறைகளில் இயங்கி வரும்எம்ஜிஎம்குழுமத்திற்குத்தொடர்புடைய, 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரில் நடத்தப்படும், இந்த சோதனை சென்னை, செங்கல்பட்டு, நெல்லை உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. விழுப்புரத்தில் உள்ளஎம்ஜிஎம்மதுபான ஆலையில் சோதனை நடைபெறும் போது, ஊழியர் ஒருவர் முக்கிய ஆவணங்களை வயல் வெளியில் வீசிசென்றதாகத்தகவல் வெளியாகியுள்ளது.அவற்றைக்கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த ஆவணங்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)