சென்னை குன்றத்தூர் பகுதியில்நேற்றுஇரவிலிருந்து மின்வெட்டு ஏற்பட்டதால் ஊரடங்குநேரத்தில் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் லோ-வோல்டேஜ் காரணமாகவும் பொதுமக்கள் அவதியுற்றனர்.
ஒரு பக்கம் ஊரடங்கு உத்தரவு மறுபுறம் கோடை வெயில்என்றநிலையில், மின்வெட்டால் வீட்டில் இருக்கும் மக்கள்வியர்வை போன்ற பல நெருக்கடிகளுக்கு ஆளாகினர். அதேபோல் இன்றும் பல முறை மின்வெட்டு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மேலும் அவதியுற்று வருகின்றனர்.