Advertisment

தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் இரண்டாம் நாள் வகுப்பு புறக்கணிப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 2- வது நாளாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் தேசிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

Advertisment

Second day class boycott by students against National Citizenship Act

இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமாரவேல், நிர்வாகிகள் சுனில், சிலம்பரசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பரங்கிப்பேட்டையில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக முனைவர் உசேன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் வேல்முருகன், சமூக ஆர்வலர் மாலிக், காங்கிரஸ் கட்சி செய்யது அலி உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

Advertisment

Second day class boycott by students against National Citizenship Act

மேலும் தேசிய குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

CHITHAMPARAM citizenship amendment bill Cuddalore protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe