Advertisment

ஏழு மாவட்டங்களில் துவங்கப்பட்ட ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்!

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நோயாளிகளுக்கு வீடு தேடி மருந்துகள் வழங்கும்‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கோவை, சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின், கிருஷ்ணகிரியில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று (05.08.2021) தொடங்கிவைத்தார்.

Advertisment

முதலாவதாக கோவையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தைத் தொடங்கிவைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தொடர்ந்து சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் காணொலிகாட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த நிலையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை ஒன்றியம் மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கிவைத்தார்.

Advertisment

தொடர்ந்து அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் வாகனத்தைத் தொடங்கிவைத்தனர். மேலும் இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, எம்.எல்.ஏக்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

madurai Project Tirunelveli trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe