Skip to main content

”மாணவர்களை தேடி” -கலாம் வழியில் அசத்திய பொன்ராஜ்

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

 

அப்துல் கலாமின் அறிவியல் அலோசகரும் உதவியாளருமான பொன்ராஜ் அப்துல் கலாம் மறைவுக்கு பிறகு கலாமாகவே மாறி மாணவர்களை தேடி தேடி செல்கிறார். அவர்களின் உள்ள கிடங்கை வெளியே எடுத்து அவர்களின் திறமைகளை வெளியே கொடுவருவதே அவரின் குறிக்கோளாக இருக்கிறது.

 

 Kalam



அப்படிதான் கடந்த வருடங்களில் ”அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம்” சார்பில் தமிழக முழுவதும் சென்று பள்ளி கல்லூரி மாணவர்களை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதில் அவர்களை ஊக்குவிக்க கூடிய போட்டிகள் நடத்துவது மேலும் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அவர்களை தயார்படுத்துவது என்று சிரத்தை எடுக்கும் நிலையில், தற்போது மதுரையில் அப்துல் கலாம் 88வது பிறந்த நாளை தமிழகம் முழுவது உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களை நன்றாக பேசகூடியவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்குள் சிறந்த பேச்சாளர்களை தேர்வு செய்ய கருத்தரங்கம் நடைபெற்றது.


 

ஒவ்வொரு மாணவர்களுக்கும் பல்வேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டது. அதில் சிவகாசியை சேர்ந்த விஜய் ”உருவாக்கு உன் வாழ்வை” புதுச்சேரியிலிருந்து வந்த வெற்றிவேலுக்கு ”வள்ளுவரின் வழியில்”, தேனியிலிருந்து அழகேஸ்வரியின் உயிர் காக்கும் உயிரி தொழில் நுட்பம்” இராமநாதபுரம் அப்ரின் ”அப்துல் கலாமி எளிய வாழ்கைமுறை”  என்று வெவ்வேறு தலைப்புகளில் பேசினாலும், கடைசியில் பேசிய அப்பர் உயர் நிலைபள்ளியில் 5ம்வகுப்பு மாணவி காவியா பேச்சே ஹை-லைடா இருந்தது அரங்கமே அந்த மழலையி பேச்சில் மயங்கி ஒன்ஸ்மோர் கேட்டு மீண்டும் பேசவைத்தனர்.


 

அவருக்கு கேடயமும் அப்துல் கலாமி புத்தகம் பரிசாக கொடுக்க குழந்தையோ  நக்கீரனில் வெளியான  ”ஆகலாம் அப்துல் கலாம்” புத்தகத்தை சுட்டிகாட்ட அந்த புத்தகத்தையே பரிசாக சேர்த்துகொண்டனர். கடைசியாக பேசிய பொன்ராஜ், நல்ல எண்ணங்களை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும் என்று அடிக்கடி அய்யா சொல்வார் மனமாற்றத்தைவிட குண மாற்றமும் வேண்டும். நாம் ஒவ்வொரு பள்ளியாக தேடி தேடி போய் மாணவர்களை நல்முத்தாக பார்க்க வேண்டும். அதன் பிரகாசத்தை ஜொலிக்கவைக்கவேண்டும். அதை உலகிற்கு கொண்டு செல்லும் வாகனமாக நாம் செயல்படவேண்டும் என்று சொல்வார். அவர் மறைந்த அன்று என் செவிகளில் அந்த வார்த்தை விழுந்து கொண்டே இருந்தது. ”மாணவர்களை தேடி” என்று அதில் எங்கள் அய்யா அப்துல் கலாமை போன்ற மனதையும் அசாத்தியமான அறிவையும் நற்குணத்தையும் மாணவர்களிடத்தில் விதைப்பது தான் இனி என் வேலை என்றார் பொன்ராஜ். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான கட்டணக் கொள்ளை; கண்டுகொள்ளாத பிரதமர் மோடி - விளாசும் பொன்ராஜ்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Ponraj Interview

 

சமீபத்தில் நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பந்தமாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்களைச் சந்தித்துப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.

 

முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் கூறுகையில் மத்திய அரசினுடைய அலட்சியத்தாலும் ரயிலில் பாதுகாப்புக் கருவி பொருத்தப்படாமல் இருப்பதன் காரணமாகவும் தான் மிகப் பெரிய இரயில் விபத்து நடந்துள்ளது என்று குற்றம் சாட்டி வருகிறார்களே?

ரயில்வேயின் முதன்மை அதிகாரி இதைப் பற்றி ஏற்கனவே அறிக்கை கொடுத்த போதும் அதற்குண்டான  நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசின் அலட்சியப் போக்கினால் தான் இப்படி ஒரு விபத்து நடந்துள்ளது. மேலும் மத்திய அரசு ரயில்வேயின் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் பட்ஜெட் மிக மிகக் குறைவு. 2018ல் ரயில்வே பாதுகாப்புக்கு மத்திய அரசு 82% தான் பட்ஜெட் ஒதுக்கியது. பின்பு ஒவ்வொரு வருடமும் இந்த சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே துறையை அதிகப்படுத்துவதற்கு 2,40,000  கோடியை ஒதுக்கிய மத்திய அரசு. ஆனால் ரயில்வே பாதுகாப்பு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இரவில் வேலை பார்க்கும் ரயில்வே ஊழியர்களுக்கு ஊதியத்தை கணிசமாகக் குறைத்துள்ளது மத்திய அரசு. இப்படி ரயில்வே ஊழியர்களுக்கு ஊதியத்தைக் குறைத்தால் அவர்கள் எப்படி வேலை பார்ப்பார்கள்? மேலும், ரயில்வேயில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அந்த பணியில் இன்னும் அமர்த்தப்படாமல் இருக்கின்றார்கள். ஆகவே இந்த 300 பேர் குடும்பத்தின் பரிதவிப்புக்கு மத்திய அரசின் அலட்சியப்போக்கு தான் காரணம்.

 

சிக்னல் தொடர்பாகத் தான் விபத்து நடந்துள்ளது. இது பற்றி சிபிசிஐடி விசாரணைக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம். அதற்குள் ஏன் பதவி விலக வேண்டும் என்று கூறி அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மத்திய அரசு கூறுகிறதே?

இந்த விபத்து நடந்ததுக்கு முக்கிய காரணம் இன்டர்லாக்கிங் சிஸ்டம் தோல்வி அடைந்தது தான். மத்திய அரசு கூறியபோதும் இந்த வழக்கை ஏன் சிபிசிஐடிக்கு கொடுக்க வேண்டும். இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்றைக்கும் மாறாமல் நிலையாக இருக்கக் கூடிய ஒரு கருவி ஆகும். இந்த இரண்டு இரயில் தண்டவாளத்தில் வரும்போது அதற்கு கொடுக்கக் கூடிய தகவல் சரியாக இருக்கும் பட்சத்தில் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் கோளாறு நடந்துள்ளது. அதற்கு ரயில்வே துறை அமைச்சர் தான் காரணம். ஒரு ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே பாதுகாப்புக்கு ஏன் பட்ஜெட் சதவீதத்தை குறைத்துள்ளீர்கள் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தவே இல்லையே. மேலும், இந்த விபத்து நடந்ததுக்கு ரயில்வே துறை ஊழியர்கள் தான் காரணம் என்று பழியை அவர்கள் மீது திருப்புவதற்குத் தான் சிபிசிஐடிடம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளது மத்திய அரசு.

 

மேலும் 66,000 கிலோ மீட்டர் உள்ள ரயில்வே துறைக்கு வெறும் 1600 கிலோமீட்டர் உள்ள ரயிலில் தான் பாதுகாப்பு கருவியான கவாச் கருவியை பொருத்தியுள்ளனர். ஒரு விபத்து நடைபெறுவதற்கு முன்னாள் 400 மீட்டருக்கு முன்னரே தகவல் தரக்கூடிய கருவியை பொருத்தப்படாமல் மேம்போக்காக இந்த விஷயத்தைக் கையாளுகிறது மத்திய அரசு. ஒரு நாளைக்கு சுமார் 25 லட்சம் பேர் பயணிக்கும் ரயில்வேயில் கழிப்பறை சுத்தமாக இல்லை. அதில் பயணிக்கும் ஒவ்வொரு பெட்டி பயணிகளுக்கு அவசர மருத்துவக் குழு இல்லை. அல்லது முதலுதவி கருவி கூட இல்லாத ரயில்வேக்கு அமைச்சராக இருந்து என்ன பயன்? தேசத்திற்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்து என்ன பயன்? இதற்கு மத்திய அமைச்சர் பதவி விலகுவதே மேல்.

 

விமான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்து இருக்கிறதே அதைப் பற்றி ?

வருடத்திற்கு ஒரு கோடி மக்கள் விமானத்தில் பயணம் செய்யும்போது இந்திய அரசிடம் பன்னிரண்டு விமானம் இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் 12 கோடி மக்கள் பயணிக்கும் இந்த விமானங்களில் இந்திய அரசிடம் வெறும் ஒரே ஒரு விமானம் மட்டுமே உள்ளது. அனைத்து துறைகளையும் இப்படி தனியார்மயமாக்கியதன் காரணமாகத்தான் இன்று ரயில்வே சேவை பற்றாக்குறை ஏற்பட்டபோது விமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஏன் அமைச்சரவை? அனைத்து துறைகளையும் கலைத்து தனியார் துறைகளிடம் கொடுக்க வேண்டியதுதானே? தற்போது கட்டி இருக்கும் நாடாளுமன்றம் பாஜக அலுவலகமா அல்லது ஆர்எஸ்எஸ் மன்றமா? என்று தெரியவில்லை. ஆக மொத்தம் இதனால் பாதிக்கப்படுவது விபத்தில் இறந்து போன 300 பேரும்... அப்பாவி பொது மக்களும் தான்.

 

 

Next Story

"ராகுலின் ஒற்றுமைப் பயணம் வெற்றி பெறும்"  - பொன்ராஜ் 

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

ponraj talks about rahul gandhi bharat jado yatra 

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி அசைத்து இந்த யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் இந்தப் பயணமானது தற்போது 117வது நாளை எட்டியுள்ளது.

 

இந்நிலையில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும், அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் ஆலோசகருமான பொன்ராஜ் வெள்ளைச்சாமி  நேற்று முன்தினம்  ஹரியானா - பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள உள்ள கர்நோல் என்ற இடத்தில் ராகுலின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் 115வது நாளில் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், "சுதந்திர தினத்திற்கு முந்தைய நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு உரையாற்றிய இலட்சியத்தை நோக்கிய முயற்சி என்ற தலைப்பில் ஆற்றிய உரை வெற்றி பெற்றதைப் போன்று, தற்போது ராகுல் மேற்கொண்டு வரும் இந்த நடைப்பயணம், மக்களை ஒன்றிணைத்து பாசிச சக்திகளைத் தோற்கடித்து இந்த ஒற்றுமைப் பயணம் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.