Advertisment

கடலில் காணாமல் போன மீனவர்; 3வது நாளாகத் தேடும் பணி தீவிரம்

search for missing fisherman sea is intense for the 3rd day

காரைக்கால்துறைமுகத்திலிருந்துகடந்த 14 ஆம் தேதி 100க்கும் மேற்பட்டவிசைப்படகுகளில்மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். அந்த வகையில்காரைக்காலைச்சேர்ந்தபிரதாப்என்பவரின்விசைப்படகுகளில்மோகன்,இளையராஜா, மணி, குமார் உள்ளிட்ட 15 பேர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர்.

Advertisment

நேற்றுமீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக நாகைநம்பியார்நகரைச்சேர்ந்ததங்கசாமிஎன்பவர்படகிலிருந்துநிலைதடுமாறிமாமல்லபுரம்அருகே 12நாட்டிகள்மைல் தொலைவில் கடலுக்குள் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சக மீனவர்கள் கடலுக்குள் விழுந்ததங்கசாமியைதேடினர். ஆனால் அவர் மாயமானதால், உடனடியாக கடற்படை,மீன்வளத்துறைமற்றும் கிராம நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

தகவலின் பேரில்காரைக்கால்துறைமுகத்தில்12க்கும்மேற்பட்ட படகுகளில் 100க்கும்மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று காணாமல்போனவரைத்தேடி வருகின்றனர். மேலும் அரசு சார்பில் விமானம் மற்றும் கப்பல் மூலம்தங்கசாமியைத்தேட வேண்டும் என்று மீனவர்கள்அரசுக்குக்கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் இன்னும் அரசு சார்பில் விமானம் மற்றும் கப்பல் மூலம் காணாமல் போன மீன்வரை தேடும் பணிகளை அரசு மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karaikal Nagapattinam fisherman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe