ADVERTISEMENT

கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளைத் தேடும் பணி தீவிரம்

06:26 PM May 31, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகத் தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டு படகு மூலமாக கொண்டு வரப்பட்ட பொழுது கடற்படை அதிகாரிகளை பார்த்ததும் தங்கக் கட்டிகளை கடலில் வீசிவிட்டு சென்ற நபர்களை அதிகாரிகள் கைது செய்த நிலையில், கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று காலை மத்திய புலனாய்வுத்துறை மற்றும் கடற்படை அதிகாரிகள் மன்னர் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இலங்கையிலிருந்து மணாலி தீவுக்கும் சிங்கள தீவுக்கும் இடையே பதிவெண் இல்லாத பைபர் படகு மூலம் தங்கக் கட்டிகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாகவும், அப்பொழுது அதிகாரிகளை கண்டதும் அந்த படகு தப்பிக்க முயன்றதாகவும், படகை பின்தொடர்ந்த அதிகாரிகளை கண்டதும் அந்த நபர்கள் தங்கக் கட்டிகளை கடலில் வீசியதும் தெரிய வந்தது. தொடர்ந்து படகை துரத்திப் பிடித்து அதிலிருந்த மூன்று நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

மூவரும் மண்டபம் காவற்படை முகாமிற்கு அழைத்துவரப்பட்டு இரவு முழுவதும் விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் 10 கிலோவிற்கு அதிகமான தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை கடற்படை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT