
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (06/04/2021) நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், தற்போது வாக்குப்பதிவுஇயந்திரங்கள் ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் கட்டுப்பாட்டு அறைக்குள் வைக்கப்பட இருக்கிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்வாக்குப்பதிவு இயந்திரங்களை அறைக்குள் கொண்டு செல்லும் பணி தற்போது துவங்கியுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளன.
உள்ளே வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குத் துணை ராணுவப்படை, அதிரடி படை, காவலர்கள் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளது. வேட்பாளர்களுக்கான முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை சீல் செய்யப்படும். அறைகளை சீலிட்டபின்அறைக்கதவுக்கு அருகே கம்பி வேலி அமைக்கப்படும். பாதுகாப்பு வீரர்களுடன் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
Follow Us