
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்அருகில் உள்ள பிரபல பெண்கள் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை இரவில் இருந்து சுமார் 50 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த வண்ணம் இருந்து வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரைத்தொடர்ந்து, திருச்சி உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர். ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் செல்வராஜ், வசந்தன், பொன்ராஜ் மற்றும் பாண்டி ஆகியோர் அந்த கல்லூரியின் உணவகத்தை ஆய்வு செய்து வந்தனர். பின்னர் மாணவிகள் உடல் நலத்திற்குத்தீங்கு விளைவிக்கும் வண்ணம் உணவு உற்பத்திஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிந்து அந்த கல்லூரியின் உணவகம் தற்காலிகமாக உணவு தயாரிக்கத்தடை செய்யப்பட்டது
மேலும், மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், “தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையில் இருந்து அங்கு சமைக்கப்படும் உணவுகளை உட்கொண்டு மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதனையடுத்து இது குறித்து புகார் அளிக்கப்பட்டத்தைத்தொடர்ந்து, தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட என்னகாரணம் என்பதை அறிய உணவுப் பாதுகாப்புத்துறையின் கீழ் இரண்டு சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவுப் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவுப் பகுப்பாய்வு அறிக்கைவரப்பெற்றதை அடுத்து இங்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத்தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)