Advertisment

 குரு நமச்சிவாய மடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்குச் சீல்

Sealing of encroachment houses in Chidambaram Guru Namasivaya Mutt

சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட வேங்கான் தெருவில் குரு நமச்சிவாய மற்றும் திருப்பாற் கடல் மடம் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மடத்திற்குச் சொந்தமான இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 22 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளால் அங்குள்ள குரு நமச்சிவாய கோவிலுக்குச் செல்வதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கும் இடர்பாடு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தனர்.

Advertisment

இதனை காலி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 8 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மீது உள்ள 14 வீடுகளை ஏற்கனவே பிறப்பித்த நீதிமன்றம் உத்தரவின் படி வீடுகளை காலி செய்து சீல் வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வியாழக்கிழமை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட 14 வீடுகளுக்கு சீல் வைத்து அதற்கான விபரத்தை கதவுகளில் ஒட்டினார்கள். இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் பின்னர் மாற்று இடம் வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர். இதற்கு இந்த நிலையில் ஒரு மணி நேரம் அவகாசம் வழங்குவதாகும் விரைவில் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையினர் கூறினார்கள் இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

house sealed
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe