பாரிமுனையில் 130 கடைகளுக்கு சீல்... வாடகை தராததால் அதிரடி!

 Sealing of 130 shops in Barimuna... Action for non-payment of rent!

சென்னை பாரிமுனையில் வாடகை தராத 130 மாநகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலம் ஐந்தில் இருக்கக்கூடிய பாரிமுனையில் ரத்தன் பஜார், பிரேசர் பிரிட்ஜ் ஆகிய சாலைகள் உள்ளது. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகள் உள்ள நிலையில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. நிலுவை தொகையாக அந்த 130 கடைகளில் இருந்து மட்டும் 40 லட்சம் ரூபாய் வர வேண்டி உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையாக அந்த 130 கடைகளுக்கும் சீல் வைத்துள்ளனர். வாடகை நிலுவை தொடர்பாக அந்த 130 கடைகளுக்கு ஏற்கனவே மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணம் தரப்படாததால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe