ADVERTISEMENT

சேலம்,மதுரையில் விதியை மீறிய இறைச்சி கடைகளுக்கு சீல்

09:43 AM May 17, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்திலும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. சேலம் மாநகராட்சியில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் சேலத்தில் தடையை மீறி இயங்கிய 6 இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கடையிலிருந்து 75 கிலோ மீன், 20 கிலோ கோழிக்கறி, 13 கிலோ ஆட்டு இறைச்சி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் விதிகளை மீறி இயங்கிய 15 இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுரையில் தடையை மீறி திறக்கப்பட்ட கடைகளில் இருந்து 600 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT