திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் உள்ள ஜின்னா சாலையில், ஊரடங்கு உத்தரவையும் மீறி நகராட்சி அனுமதி பெறாமல் குடோனில் பதுக்கி வைத்து வெளியில் வாகனத்தை குறுக்காக நிற்கவைத்து காய்கறி வியாபாரம் செய்து வந்தன சில கடைகள். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.

Advertisment

Sealed for 7 stores in vaniyampadi

அதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள், காய்கறி கடை உட்பட 7 கடைகளுக்கு நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அந்த கடைகளில் இருந்த 3 டன் காய்கறிகளைபறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அப்போது நகராட்சி அதிகாரிகளிடம், வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் வியாபாரிகளை எச்சரித்து அனுப்பினர்.