வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல்..!

Seals for ballot boxes sealed

புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், கந்தர்வகோட்டை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 1,902 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், அனைத்து தொகுதிகளின் வாக்குகளும் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது.

இந்த மையத்திற்கு நேற்று (06.04.2021) இரவு 9 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி, டிவி மற்றும் ஆயுதம் தாங்கி 140 காவலர்கள் பாதுகாப்புடன் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் ரகு, வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் அறைகள் சீல் வைக்கப்பட்டன.

EVM MACHINE Pudukottai sealed
இதையும் படியுங்கள்
Subscribe