கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் அசோக் என்பவர் ஐந்து ஆண்டுகளாக மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மருந்தகத்தில் அரசின் முறையான அனுமதி இன்றி வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது.
இதனை அடுத்து புகாரின் அடிப்படையில் மருந்தகத்தை ஆய்வு செய்த வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட மருந்தகத்தை வருவாய் ஆய்வாளர் உதவியுடனும் சின்னசேலம் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையிலும் சீல் வைத்தனர். மேலும் மருந்தகத்தில் பயன்படுத்தப்பட்ட அதிக வீரியம் கொண்ட மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் மருந்தக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து சின்னசேலம் காவல் நிலைய காவலர்கள் உரிமையாளரை கைது செய்தனர்.