Skip to main content

கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், நல்லி குப்புசாமியின் திருமண மண்டபத்திற்கு சீல்!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
nalli


தொழில் வளர்ச்சிக்காக ஆந்திராவில் வாங்கப்பட்ட கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என கும்பகோணத்தில் உள்ள திருமண மண்டபதுக்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர்.

சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் நல்லிகுப்புசாமி, இவரது மனைவி அலுமேலு அம்மாள். இவர் ஆந்திரா மாநில தொழில்வளர்ச்சிகழகத்தில், தொழில்வளர்ச்சிக்காக கடன் பெற்றார். வாங்கும் கடனுக்கு ஈடாக கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் உள்ள தனது தந்தை வழங்கிய சொத்தான தருமண மண்படத்தின் பத்திரங்களை கொடுத்துள்ளார்.

 

 

ஆனால் வாங்கிய ரூ.3.20 கோடி கடனை ஆந்திர மாநில தொழில்வளர்ச்சி கழகத்துக்கு திரும்ப செலுத்தாமல் இருந்ததுள்ளார். மேலும், பலமுறை கடன் தொகையை கேட்டும் திருப்பி செலுத்தவில்லை.

இந்த நிலையில் வருவாய் வசூல் சட்டத்தின்படி ஆந்திர மாநில அரசு, தமிழக அரசிடம் நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரை செய்தது. அதன் பேரில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின்பேரில், கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடாசலம் தலைமையிலான அதிகாரிகள் போலீஸாரின் பாதுகாப்போடு வந்து கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் உள்ள 7620 சதுரஅடி பரப்பளவில் உள்ள திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.

பெரும் நிறுவனமும் இப்படித்தானா என அனைவரும் வாய்பிலந்தனர்.

சார்ந்த செய்திகள்