Advertisment

சென்னையில் பிரபல பிரியாணிக் கடையின் சமையலறைக்கு சீல்!

Seal for the kitchen of a popular grocery store in Chennai!

அண்மையில் கேரளாவில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கேரள மட்டுமல்லாது தமிழக்தில் உள்ள பல்வேறு அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள யா மொய்தின் எனும் பிரபல பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சதீஷ் தலைமையில் நடைபெற்ற சோதனையில் சிக்கன், மீன் உள்ளிட்டவை கெட்டுப்போன நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கெட்டுப்போன பொருட்கள் இருந்ததை அடுத்து அந்த ஹோட்டலின் சமையலறையை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். 15 நாட்களுக்கு பிறகு நடத்திய ஆய்வு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஆரணியில் உள்ள '5 ஸ்டார் எலைட்' என்றஅசைவ உணவகத்தில் கடந்த மே 24 ஆம் தேதி தந்தூரி சாப்பிட்ட 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கடந்த 29 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாககூறப்படும்நிலையில், அந்த ஹோட்டல் மீது எழுந்த புகார் மீதான விசாரணை முடியும் வரை அந்த உணவகத்திற்கு சீல் வைக்க காவல்துறை சார்பில் நகராட்சி ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

biriyani Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe