Skip to main content

பிரபல பன் புரோட்டா கடைக்கு சீல்! 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Seal the famous Bun Protta restaurant

 

சுகாதாரமற்ற முறையில் உணவுத் தயாரித்ததாகக் கூறி, பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவுப் பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர். 

 

மதுரை மாவட்டம், சாத்தமங்கலம் ஆவின் பால்பண்ணை சந்திப்பு சாலையோரத்தில் அமைந்துள்ள 'மதுரை பன் புரோட்டா' என்ற பெயர் கொண்ட கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவுத் தயாரிப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கடைக்கு நேரில் சென்ற உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அங்கு அதிரடியாக ஆய்வு செய்ததுடன், சோதனையும் மேற்கொண்டனர். 

 

இதில், சுகாதாரமற்ற முறையில் உணவுத் தயாரிப்பது உறுதியானதால், அந்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 


சார்ந்த செய்திகள்

Next Story

பரோட்டா குருமாவில் பூரான்; இருவர் மயக்கம்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

Puran in Parotta Kuruma; Both fainted

 

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே பூரான் விழுந்த குருமாவை அறியாமல் சாப்பிட்ட இருவர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் பகுதியில் உள்ளது எட்டிக்கொட்டைமேடு பகுதி. இந்த பகுதியில் முருக விலாஸ் என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் கச்சுப்பள்ளி பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன், கலையரசன் ஆகிய இருவர் பரோட்டா பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர். மொத்தம் 7 பரோட்டா வாங்கிச் சென்ற நிலையில் இருவரும் சாப்பிட்டுள்ளனர்.

 

முதலில் ஆளுக்கு இரண்டு பரோட்டாக்கள் சாப்பிட்டுவிட்டு கடைசி மூன்று பரோட்டாக்களை ஆளுக்கு பாதியாக பிரித்து சாப்பிட குருமாவை ஊற்றியபோது அதில் பூரான் கிடந்தது கண்டு அதிர்ந்தனர். அதையடுத்து சிறிது நேரத்தில் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். உடனடியாக இருவரும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

சிக்கன் ஷவர்மா வரிசையில் பரோட்டா - கேரளாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

 Barotta incident- Another shocking incident in Kerala

 

கடந்த வருடம் கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 11 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் சிக்கன் ஷவர்மா தடை செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல், கேரளாவை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிக்கன் ஷவர்மா தயாரிக்கப்படும் கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

 

இந்த நிலையில், கேரள மாநிலம் இடுக்கியில் பரோட்டா சாப்பிட்ட 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் நயன் மரியா. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்து மைதா, கோதுமை உள்ளிட்டவையால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு ஒவ்வாத நிலை இருந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் மைதா உணவுகளை சாப்பிடக் கூடாது என நயன் மரியாவிடம் அறிவுறுத்தியிருந்தனர்.

 

இந்த நிலையில், பரோட்டா சாப்பிட ஆசைப்பட்ட மரியா அங்குள்ள கடை ஒன்றிற்கு சென்று பரோட்டா சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்த அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இருப்பினும், நயன் மரியா சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இச்சம்பவம் மீண்டும் கேரளாவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.