style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் போலி பல்கலைக்கழகத்திற்கு மருத்துவத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். கடந்த9 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானபோலிமருத்துவ சான்றிதழ் வழங்கியதும் அம்பலமாகியிருக்கிறது.
நாகை மாவட்டம் குத்தாலத்தில், அகில உலக திறந்த வெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம் என்கிறபெயரில் போலியான பல்கலைக்கழகம் ஒன்றை செல்வராஜ் என்வர் கடந்த 09 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார் தொலைதூர பல்கலைக்கழகம் என்கிற பெயரில் இவர் நாடு முழுவதும் ஆயுர்வேத சித்தா ஆகியமருத்துவர் துறைகளின் கீழ் போலிசான்றிதழ்கள் அளித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இவரிடம் பணம் கட்டி ஆயிரக்கணக்கானோர் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் போலி மருத்துவ பட்டங்களை பெற்றுள்ளனர்.
இவரிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும் மாற்றுமுறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து தினசரி பத்திரிகை ஒன்றில் விண்ணப்பங்கள் வரவேற்பதாக இவர் அளித்த விளம்பரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்றுஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, குத்தாலத்தில் ஒரு ஒரு வீட்டில் இந்த போலியான பல்கலைக்கழகம் நடத்தி வருவது தெரியவந்தது.
சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனரக அதிகாரிகள் டிஎஸ்பி தாமஸ்பிரபாகர் தலைமையில், நாகைஇணை இயக்குனர் மகேந்திரன், உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்டமருத்துவர்கள், போலி பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் ஏராளமானபோலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலி பல்கலைக்கழகத்தை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். போலிமருத்துவ சான்றிதழ்கள் சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில்பல்கலைக்கழகம் நடத்தி வந்த திருவேள்விக்குடி பகுதியை சேர்ந்த செல்வராஜை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.