கடற்கரை மற்றும் தீவுப்பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து சென்ற நிலையில், சேதமடைந்த வலையில் சிக்கி உயிருக்குப் போராடிய 7 வயது ஆமையை மீட்டு, மீண்டும் ஆமையை கடலில் விட்டுள்ளனர்.

Advertisment

sea

மன்னார் வளைகுடா அமைந்துள்ள, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதிகள் மட்டுமல்லாது, கன்னிராஜபுரம், மூக்கையூர், ஏர்வாடி, சேதுக்கரை, புதுமடம், ஆற்றங்கரை, அரியமான் உள்ளிட்டப் பகுதிகளில் ஆமைகள் அதிகளவில் முட்டையிட்டு, குஞ்சுபொரித்து தங்களுடையை இனவிருத்தியை பெருக்கிக்கொண்டு வருகின்றன. இதற்காகவே ஆமைகளைப் பாதுகாக்க முதல் 5 நாட்டிக்கல் மைல் வரை மீன் பிடிக்க வேண்டாம். வலையில் ஆமைகள் சிக்கும் பட்சத்தில் அதனை பத்திரமாக கடலில் விடவேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை மீனவர்ளுக்கு வழங்கி வந்தது வனத்துறை.

இது இப்படியிருக்க, ஊரடங்கு அமலில் இருக்கும் வேளையில், இன்று கடலோரம் ரோதுப் பணியியனை மேற்கொண்ட வனத்துறையினர் அழகன்குளம் பகுதியில் சுற்றிவரும் போது, " கரையிலிருந்து 200 அடி தூரத்தில் கடலுக்குள் ஏதோ மிதந்து துடிப்பது போல் தெரியவர" நாட்டுப் படகு உதவியுடன் அங்கு சென்று பார்க்க, " சேதமடைந்த மீன்வலையில் 7 வயது ஆமை ஒன்று உயிருக்குப் போராடி வந்தது தெரிய வந்துள்ளது." அதனைப் பத்திரமாக மீட்ட வனத் துறையினர், மீண்டும் அதனை கடலுக்குள் விட்டனர். அதேவேளையில், " மீன்பிடிப்பின் போது சேதமடையும் வலைகளை கடலில் விடக்கூடாது என்றும், கடலில் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மிதந்தால் அதனை எடுத்து கரையில் போடவேண்டும்." எனவும் மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.