Sea estuary dredging works at Kollam Chinnakanal near Chidambaram

Advertisment

சிதம்பரம் அருகே கிள்ளை சின்ன வாய்க்கால் கடல் முகத்துவாரம் மணல் முட்டுகளால் தூர்ந்துவிட்டதால் கடந்த சில மாதங்களாககிள்ளை பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி பிச்சாவரம் சுற்றுலா மைய பணிகளை ஆய்வு செய்யதமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வருகை தந்தார். அப்போதுஅவரிடம் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சின்ன வாய்க்கால் கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இதன் அடிப்படையில் அமைச்சர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜியிடம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்துபணிகளைத் துவக்க உத்தரவிட்டார். அதன் பெயரில் பொதுப்பணித்துறை சார்பில் பொக்லின் இயந்திரம் மூலம் கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.இதில் கிள்ளைபேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் கிள்ளை பில்லுமேடு, சின்ன வாய்க்கால் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கிள்ளை பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.