Advertisment

விலைவாசி உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!!

SDPI protests against price hike

தமிழ்நாட்டில் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். ஒருபக்கம் நோயால் பொது மக்கள் பாதிக்கப்படும் நிலையில், மற்றொரு பக்கம் விலைவாசி உயர்வாலும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அவற்றின் விலை உயர்வால் அத்தியாவசியப்பொருட்களான காய்கறி, மளிகைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அதை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.

Advertisment

வேலைவாய்ப்பும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் தவிக்கக் கூடிய பொதுமக்கள், இப்படிப்பட்ட விலைவாசி உயர்வால் பெரிய பாதிப்பை சந்தித்துவருவது தொடர் கதையாகிவருகிறது. எனவே தமிழ்நாடு அரசு இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி பாலக்கரை பகுதியில் எஸ்டிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

SDPI struggle trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe