கோவையில் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியை உயர் நீதிமன்ற உத்தரவின் படி கருணை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி, எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Advertisment

sdpi petition to coimbatore collector

அவர்களது மனுவில், "கோவையில் 1991 ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில், அப்துல் ஹமீத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை மத்திய சிறையில் இருந்த இவர், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அப்துல் ஹமீத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விடுதலை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்துல் ஹமீதை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்" எனக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யாமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாகவும், உடனடியாக விடுதலை செய்யவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படுமெனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.